மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil

2018-02-03 43

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோவில் மாடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் செத்து மடிந்துள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் இருபுறங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
நேற்று இரவு கோவில் நடை முழுவதும் சாத்தப்பட்டு கோவில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். அப்போது திடீரென தீ பற்றி எரிந்தது.

மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் தெற்கு, கிழக்கு கோபுர வாசல் பக்கம்தான் பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள். கிழக்கு கோபுர வாசல் பகுதியில் கடைகள் அதிகம் உள்ளன. கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் கால் மண்டபம் இந்த பகுதியில்தான் உள்ளது


Major fire accident in Madurai Meenakshi temple. Fire and safety officials said the fire soon spread to the nearby shops and raged till the Aayaram Kaal Mandapam.Ancient sculptures on walls near the Aayaram Kaal Mandapam were damaged and doves inside the east gopuram too died, he added.

Videos similaires